சவுக்கு சங்கருக்கு தரமான சம்பவம் செய்த பெண் காவலர்கள்..!!

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரை பேட்டியெடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு மே மாதம் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதேபோல் சவுக்கு சங்கரிடம் பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜனால்டை டெல்லியில் வைத்து கைது செய்த திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை விசாரணைக்காக திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று அழைத்து சென்றனர். பெண் காவலர்களை இழிவுபடுத்து வகையில் பேசிய சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் வைத்தே காவல்துறை வாகனத்தில் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி காவல்துறையின் காவலர்கள் அழைத்து செல்கின்றார்கள். யாரை அவமானப்படுத்தி சவுக்கு சங்கர் பேசினாரோ அவர்களை வைத்து அழைத்து செல்வதாக இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

பயங்கர விபத்து..!! ஆம்னி பேருந்து லாரி மீது மோதியதில் 4 பேர் பலி..!!

Read Next

முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு..!! சவுக்கு சங்கர் மீது எட்டாவது வழக்கு பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular