சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!! கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு..!!

பிரபல யூடியுபரான சவுக்கு சங்கர் தனியார் யூடியுப் சேனலுக்கு அளித்த பெட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள் பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சர்க்கரை கடந்த நான்காம் தேதி கைது செய்தனர்.

அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின் அந்த இந்த வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் கடந்த பத்தாம் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தலைமை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் யூடியூப்பர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவல் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பெண் காவலர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read Previous

தமிழகத்தில் அடுத்தடுத்து வரும் தேர்தல்..!! சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

Read Next

வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற சிறப்பு திட்டங்கள் தேவை..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular