சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் தாக்குதல்..!! நீதிபதி அதிரடி உத்தரவு..!!

பெண் காவலர் குறித்து அவதூராக பேசிய வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆர்ஜபடுத்தப்பட்டார், முன்னதாகவே கோவை மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் வாகனத்தின் மூலம் திருச்சிக்கு அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கருக்கு முழுக்க முழுக்க பெண் காவலர்கள் பாதுகாப்பு வழங்கினார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு ஆளான நிலையில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டுள்ளார், கோவையிலிருந்து  அழைத்து வரப்பட்ட போது பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் ஏற்கனவே உடைக்கப்பட்ட தன் கை மீது மீண்டும் தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டதை மறுத்துள்ள காவல் துறையினர் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயப்பிரதா அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து அழைத்து வருமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். நீதிபதியின் உத்தரவை அடுத்து சவுக்கு சங்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read Previous

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை வெளுத்து வாங்கும் மழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Read Next

யானை வழித்தட திட்ட வரவு அறிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்..!! டிடிவி தினகரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular