சவுக்கு சங்கர் விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்..!! விபரம் உள்ளே..!!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் பக்கத்தில் யூடியூப் சவுக் சங்கர் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அவர் கோவை மாவட்ட  காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்தல், பெண்களை அவதூறாக பேசுதல் ஆகிய பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பின் குண்டார் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ரெட் பிக்ஸ் யூடியூப் தளத்தில் வெளியான வீடியோவின் பெயரில் அதன் தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது இந்த விஷயம் தொடர்பாக ரெட் பிக்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக ரெட் பிக்ஸ் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில் “சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசியது எங்களின் கருத்துக்கள் இல்லை. இதனால் காவல்துறையில் பணியாற்றி வரும் பெண்கள் வருத்தம் அடைந்திருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். சர்ச்சைக்குரிய வீடியோ காவல்துறையின் விசாரணைக்காக தனிப்பட்டு  மறைத்து வைக்கப்பட்டுள்ளது”, என்று கூறியுள்ளார்.

Read Previous

30 நிமிடங்களில் பல் வலி நீங்க..!! இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Read Next

#Breaking: இரவு 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular