சவுதி அரேபியா அருகே டவர் கம்பத்தை மின்னல் தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள கடிகார டவரை மின்னல் தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது, மெக்காவில் உள்ள உயரமான கட்டிடங்களில் கடிகார டவரும் ஒன்றாகும் அதனை காது ஜவ்வை கிழிக்கும் வகையில் பயங்கர இடி சத்தத்துடன் மின்னல் தாக்கியுள்ளது, அப்போது வானில் இருந்த நாலா பக்கமும் கண்ணை கூசும் வகையில் வெளிச்சம் பரவியது இந்த காட்சியை ஒரு வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனைப் பார்த்து இணையவாசிகள் பலரும் தங்களது வியப்புத் தன்மையை கருத்தாக தெரிவித்து வருகின்றனர், மேலும் இயற்கையின் சீற்றங்களோ மின்னல்களோ மக்களைவிட பெரும் சக்தி வாய்ந்தவைகளாகவே இருக்கிறது என்று இன்றும் மக்கள் புரிந்து கொள்கின்றனர், இந்த காணொளியை சவுதி அரேபியா மெக்கா மக்கள் தங்கள் வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்..!!