சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.60,000 ஊதியம் வழங்கப்பட உள்ள நிலையில், நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.




