
Oplus_131072
சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா..?? இல்லை வராதா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!!
சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று ஒரு கும்பலும் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது என்ற ஒரு கும்பல் பேசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? இல்லை வராதா? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் தான் உடல்நலம் இருக்கிறது. பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தைதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் வருகிறது என்று கூறப்படுகிறது.
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் சாதத்தை வடித்து தான் சாப்பிட்டார்கள். அப்பொழுது எல்லாம் சர்க்கரை நோய் பெரிதாக அனைவருக்கும் வரவில்லை. சாதம் வடித்து சாப்பிடும் பொழுது சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும். அதில் சிறிது உப்பை போட்டு குடித்தால் கண் எரிச்சல் பித்தம் ஆகிய நோய்கள் நீங்கும். எனவே சாதத்தை வடித்து சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது. அதும் சாதம் வடித்த கஞ்சியை சாப்பிடும் பொழுது நீர்க்கடுப்பை வாயு தொல்லை போன்றவை நீங்கும்.