
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தன்ட்ரிக் கட்சியை சேர்ந்த பிரதிநிதி ரமேஷ் பெனிவால் (35). இவரின் மனைவி சுமன். தம்பதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்குள் பிரச்னை இருந்து வந்ததாக தெரியவருகிறது. சம்பவத்தன்று சுமன் தனது கணவருக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் மனைவியின் மீது ஆத்திரமடைந்த ரமேஷ், கல்லால் அடித்தே மனைவியை கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் ரமேஷை கைது செய்தனர்.