சாப்பிடும் போது ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

சமையலில் மிக முக்கிய பொருளாதரதப்படுவது கருவேப்பிலை. பலரும் இதை நறுமணத்திற்காக பயன்படுத்துவதாக எண்ணுகின்றனர், ஆனால் கருவேப்பிலை உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளது. எனவே கருவேப்பிலை சாப்பிட்டு வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்ப பதிவில் காணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

அதே போல் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான உடலை பெற முடியும்.

ரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் கருவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை குணமடையும்.

கருவேப்பிலை இலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பது மட்டுமின்றி நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்க பயன்படுகிறது.

குறிப்பாக கருவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வருவதால் தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல பலன் கொடுக்கிறது மேலும் முடி கருமையாக வளரவும் உதவி செய்கிறது.

Read Previous

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இந்த பழம் மட்டும் போதும்..!!

Read Next

அலார சத்தம் கேட்டு எழுவோரா நீங்கள்..? அச்சச்சோ உங்களுக்குத்தான் பேராபத்து..!! விபரம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular