அன்றைய காலங்களில் தாத்தா பாட்டி எல்லாம் சாப்பிட்டபின் வெற்றிலை பாக்கப் போடுவது நடைமுறை பழக்கமாக இருந்தது, இதனால் உடல் ஆரோக்கியமாக வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருந்துள்ளது..
ஆனால் இன்றைய காலங்களில் உணவு பழக்க முறையில் மாற்றங்களிலிருந்து செரிக்காத உணவான ஃபாஸ்ட் புட் மற்றும் மைதாவால் செய்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறோம் இதனால் உடல் எடை கூடுவது மட்டுமல்லாமல் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது, இதனை சரி செய்வதற்கு வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து போடுவதனால் செரிமான பிரச்சனை நீங்கி வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கிறது, மேலும் அசைவு உணவுகள் சாப்பிட்ட பின்பு வெற்றிலை போடுவதனால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கின்றது..!!