
நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டில் உள்ள பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது. குளித்த பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது. குளிக்காமல் இதையெல்லாம் செய்யக்கூடாது. என்று பல கோட்பாடுகளும் கட்டமைப்புகளும் வைத்திருப்பார்கள். அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சாப்பிட்ட பிறகு ஒரு சில செயல்களை எல்லாம் முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு இந்த செயல்களை எல்லாம் நாம் ஒருபொழுதும் செய்யக்கூடாது ஏன் தெரியுமா..? அதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சாப்பிட்டவுடன் ஒருபொழுதும் தண்ணீரை வயிறு முட்ட குடித்து விடாதீர்கள். இது ஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். குறிப்பாக ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், சாப்பிட்ட உடன் ஒருபொழுதும் படுத்து விடக்கூடாது. ஏனென்றால், உடல் செயல்பட மிகவும் சிரமப்படும் இதனால் ஜீரணம் முறையாக நடக்காது. சாப்பிட்ட உடன் சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு முன்னால் ஒரு பொழுதும் தண்ணீரை அருந்தி விடாதீர்கள். மேலும் சாப்பிட்டவுடன் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து ஆவது நாம் படுக்கவோ அல்லது உறங்கவோ வேண்டும்.குறிப்பாக மதிய நேரம் உறங்குவதற்கு இது பொருந்தும். ஏனென்றால் மதியத்தில் உறங்குபவர்கள் சாப்பிட்டவுடன் படித்து விடுவார்கள் இப்படி ஒரு பொழுதும் செய்து விடாதீர்கள்.
நாம் சாப்பிட்டு விட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.