நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ இந்து சாஸ்திரத்தில் அனைவரும் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கோயிலில் சாமியை வணங்கி விட்டு செல்லும் பொழுது அங்கு சாமி கயிறு கொடுப்பார்கள் அதை கையில் கட்டிக் கொள்வார்கள் பக்தர்கள். இந்நிலையில் அந்த சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சாமியை வணங்கி பக்தியுடன் கட்டும் இந்த கயிற்றை பலர் வருட கணக்கில் கூட கையில் கட்டி இருப்பார்கள். ஆனால் அந்த கயிற்றின் சக்தி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். அறியாமலால் சிலருக்கு கோவிலில் கட்டப்படும் கயிறு, மந்திரிக்கப்பட்ட கயிறும் நிறம் மாறி அதுவே அருந்து விழும் அளவிற்கு கட்டுவார்கள். மேலும் இந்த கயிற்றில் அதாவது கோயிலில் பெறப்படும் கயிறாக இருந்தாலும் சரி மந்திரிக்கப்பட்ட கயிறாக இருந்தாலும் சரி இந்த கயிறு சக்தி 21 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்திக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ கட்டப்படும் இந்த கயிற்றை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதால் தான் இந்த கயிற்றின் சக்தியை நாம் முழுமையாக பெற இயலும்.கையில் கட்டி இருக்கும் கயிறு 21 நாட்களுக்கு முன்னதாக அவிழ்ந்து விட்டால் இந்த கயிரின் சக்தி நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவிழ்ந்து கீழே விழுந்த கயிற்றை எடுத்து மீண்டும் கட்டக்கூடாது. மேலும் பெண்கள் இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் கயிற்றை கட்ட வேண்டும் என்பதே சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கைற்றை கையில் இருந்து கழட்டும்போது அதை நாம் ஆங்காங்கே வீசக்கூடாது ஆறு அல்லது நதிகள் போன்றவற்றில் வீசுவதே மங்களகரமானதாகவும் அதன் சக்தியை நாம் பெரும் மாறும் கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்டு செயல்படுங்கள்.




