நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒவ்வொரு வீடுகளிலும் பூஜை அறையும் சரி பூஜை நடத்தும் முறையும் சரி ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றி அதை செய்வார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் உள்ள பெண்களில் பலருக்கு பூஜை செய்வது எப்படி மற்றும் வீட்டை தெய்வீக அருள் கிடைக்க எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பூஜை அறையையும் வீட்டையும் துடைக்க கூடாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டையும் பூஜை அறையும் சுத்தம் செய்யலாம். குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி, வருடப்பிறப்பு போன்ற சில முக்கியமான பண்டிகை நாட்களுக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்வது மிகவும் சிறப்புடையது. பலருக்கு சாமி படங்களுக்கு என்ன பூ வைப்பது என்று தெரியாமல் அனைத்து வகையான பூக்களையும் வைப்பார். ஆனால் சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள். சாமி படங்களுக்கு வாசனை நிறைந்த மல்லிகை, முல்லை, ரோஜா, மரிக்கொழுந்து, போன்ற வாசல் நிறைந்த பூக்களை சாமி படங்களுக்கு வைப்பதன் மூலம் நம் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. எனவே, பூஜை செய்யும்போது சாமி படங்களுக்கு வாசனை நிறைந்த பூக்களை வைப்பதற்கு தவறி விடாதீர்கள்.




