சாமி பட வில்லன் நடிகரா இது..!! தள்ளாடியபடியே வாக்களிக்க வந்த கோட்டா சீனிவாச ராவ்..!! வைரல் வீடியோ..!!

தெலுங்கில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த “பிராணம் கீரக்கிடு” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற “சாமி” திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்கின்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இவர்  தமிழில் “குத்து”, “ஜோர்”, “திருப்பாச்சி”, “பரமசிவன்”, “சத்யம்”, “தனம்”, “பெருமாள்” “ஜகன்மோகினி”, “கோ”, “சகுனி”, “தாண்டவம்”, “ஆள் இன்ஆள் அழகுராஜா”, “மரகத நாணயம்”ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில சட்டமன்ற உதவி உறுப்பினராக இருந்தார். அவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு 2015 ஆம் ஆண்டிற்கு பத்மபூஷன் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது. இந்த நிலையில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தளர்ந்த நடையோடு தள்ளாடியபடி வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அவரை உறவினர் ஒருவர் கைதாங்களாக அழைத்து வந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Read Previous

பதற வைக்கும் கவர்ச்சி..!! ஹார்ட்ட வைக்கிற இடமா அது..? திணற வைத்த திஷா பதானி.!!

Read Next

ஜோதிகாவோட அம்மாவா இது.? தீயாக பரவும் புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular