சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..!! வெளியான தகவல்..!!
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி19 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் பி.சி.சி.ஐ.க்கு திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.