சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எங்கே?.. வெளியான முக்கிய அப்டேட்..!!
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ந் தேதி முதல் மார்ச் 9ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், ‘குரூப் பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டிகள் லாகூர், கராச்சி, ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. பாதுக்காப்பு காரணமாக இந்தியா விளையாடும் அனைத்து போட்டியும் லாகூரிலே நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள ஆட்டம் லாகூர் மைதானத்தில் மார்ச் 1ந் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.