சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்…!

கால்பந்து போட்டி நடைப்பெற்றதில்  அரசு பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்று கோவில்பட்டி மாணவர்கள் அபாரம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பாக வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 8 அணிகள் விளையாடினர். இறுதிப்போட்டியில் கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் நாடார் மேல்நிலைப்பள்ளியும் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி அடைந்துள்ளது.

மேலும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் லட்சுமி மில் மேல்நிலை பள்ளி அணியும் மோதியதில் 3-2 என்ற கோல் கணக்கில் காமநாயக்கன்பட்டி அணி மூன்றாவது இடத்தை தட்டி சென்றது. இதன்பின் பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில் கால்பந்து கழகச் செயலாளர் தலைமை ஏற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேடயங்களை பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் கால் பந்து கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

Read Previous

ரூ.7 லட்சத்தை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்…! போலீஸ் விசாரணை…!

Read Next

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி இளைஞர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular