திருப்பத்தூர் மாவட்டத்தில் சாரைப்பாம்பு சமைத்து சாப்பிட்டதை வீடியோ எடுத்து பகிர்ந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சார்ந்த ராஜேஷ்குமார் (வயது 30). இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை சமைப்பதற்காக தோலை உரித்து வெட்டி சுத்தம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ராஜேஷ்குமார் தான் சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்பு கொண்டுள்ளார், மேலும் அவர் கைது செய்யப்பட்டார், மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ராஜேஷ்குமார் ஆஜர்படுத்தப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.