
புரதங்கள் தான் நம்முடைய உடலின் பெரும்பாலான செயல்பாட்டுக்கும் தசையின் வளர்ச்சிக்கும் உதவு கூடியது. உடலுக்கு தேவைப்படுகிற முதன்மையான ஊட்டச்சத்து என்றால் அது புரதம் என்று சொல்லலாம். தினமும் சிக்கனும் சாப்பிட முடியாது..
ஆனால் புரதம் நிறைய தேவை அதுக்கு தீர்வுதான் இந்த உணவுகளை உண்ணும் போது சிக்கனை விட புரதங்களும் அதிகம் கொண்டது. அந்த வகையில் எவ்வாறான உணவுகளை நாம் உண்ண வேண்டும் என இங்கு பார்ப்போம்…
பூசணி விதை : பூசணி விதை மிகச்சிறந்த புரதமூலம் அதுமட்டுமின்றி மகனீசியம் ஜிங்குள்ளிட்டவை நிறைந்திருக்கிறது 100 கிராம் பூசணி விதையிலிருந்து உங்களுக்கு 37 கிராம் அளவு புரதம் கிடைக்கும் உங்களுடைய சாலட் ஸ்மூத்தி போன்ற இந்த விதைகளை சேர்த்து பயன்படுத்தலாம் வறுத்து உங்களுடைய ஸ்நாக்ஸில் சேர்க்கலாம்…
கடலைப்பருப்பு : பருப்பு வகைகளில் ஓரளவு புரதங்கள் நமக்கு கிடைக்கும் என்று தெரியும் ஆனால் பருப்புகளிலேயே புரதங்கள் அதிகமாக இருக்கும் பருப்பு வகை என்றால் அது கடலைப்பருப்பு தான்.அதுவும் சிக்கனை விட மிக அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியாது ஆம் நூறு கிராம் கடலை பருப்பில் கிட்டத்தட்ட 38 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கிறது அதோட நிறைய நார் சத்துக்களும் இருக்கிறது இந்த கடலைப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதங்கள் உண்டாகும் தசை வளர்ச்சி மட்டுமே செரிமானத்திற்கும் உதவி செய்யும் இதய ஆரோக்கியத்தையும் பெறுகிறது..!!