சிக்கன் டிக்கா மசாலா செய்வது எப்படி..!!

  • அரை மணி நேரத்தில் அருமையான சிக்கன் டிக்கா மசாலா செய்வது எப்படி.!

சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால் எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம்
  2. தக்காளி
  3. முந்திரி
  4. சீரகப் பொடி
  5. மல்லி தூள்
  6. கிராம்பு
  7. பட்டை தூள்
  8. ஏலக்காய் பொடி
  9. வெண்ணெய்
  10. எண்ணெய்
  11. உப்பு
  12. தயிர்
  13. இஞ்சி
  14. பூண்டு
  15. மிளகாய் தூள்

செய்முறை: முதலில் சிக்கனை எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயிர் அரை கப் சீரகப் பொடி ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு மிளகாய்த்தூள் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் உப்பு ஆகியவை தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பாக சிக்கன் நன்கு ஊறியதும் ஒரு சட்டியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரை அளவு வெந்து இருந்தாலே போதுமானது. மற்றொரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தக்காளி முந்திரி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவையை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக தாளித்து அதனுடன் சீரகப் பொடி மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்டை எடுத்து இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி ஊற வைத்துள்ள சிக்கனை வைத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை இதில் சேர்க்கவும். பின் அதனுடன் உப்பு மற்றும் க்ரீம் சேர்த்து லேசாக கிளறி ௫ நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சிக்கன் டிக்கா மசாலா வீட்டிலேயே தயாராகி விட்டது.

Read Previous

ஆசிரியர் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்..!!

Read Next

ஆசியாவின் பணக்கார இந்தியர் கௌதம் அதானி இல்லை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular