சித்தர்களின் அபூர்வ மூலிகை தண்ணீர் விட்டான் கிழங்கு..!! இதை எப்படி பயன்படுத்தலாம்.?

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்தினாலும், மாறிவரும் பழக்க வழக்கங்களினாலும் பல வகையான ருசியான உணவுப் பொருட்களை நம் நாவிற்கு அடிமையாகி விட்டது. அந்த காலத்தில் கிடைத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை தற்போது கிடைப்பதே இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக தண்ணீர்விட்டான் கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கை நம் முன்னோர்கள் சித்தர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். அதனை பயன்படுத்தி மருந்துகளும், உணவுகளும் செய்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் விட்டான் கிழங்கு பெண்களுக்கான அதிசய கிழங்கு என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியாக நாட்டு மருந்து கடைகளில் மருந்தாக தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் விட்டான் கிழங்கில் அளவுக்கு அதிகமான நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல், மூல பிரச்சினை, செரிமான பிரச்சனை போன்றவை  இவற்றால் நீங்குகிறது. இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும். இதை வாங்கி பாலில் கலந்து நாம் அருந்தி வரலாம்.

இனிப்பு தன்மையும், குளிர்ச்சியும் நிறைந்த தண்ணீர் விட்டான் கிழங்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, அதிக இரத்தப்போக்கு போன்றவைகளை கட்டுப்படுத்த உதவிகிறது .

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனையை சரி செய்து விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரளவு நோயாளிகளுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது என்றே கூறலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை,கால் எரிச்சல், ஆறாத நாள் பட்ட புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை உடைய தண்ணீர்விட்டான் கிழங்கு அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியதாகும்.

Read Previous

ஆந்திராவை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன்..!! திருப்பதியில் சந்திரபாபு நாயுடு பேட்டி..!!

Read Next

கோடைகால சரும கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular