சித்தர்கள் கூறிய சில விசித்திர பரிகாரம்கள்..!! கண்டிப்பா தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

சித்தர்கள் கூறிய சில
விசித்திர பரிகாரம்கள் !!!

1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .

2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.

5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

7.சாம்பிராணி தூபம்..

வெண்கடுகு ,நாய்க்கடுகு ,மருதாணி விதை ,சாம்பிராணி ,
அருகம்புல் வில்வ இலை ,
வேப்ப இலை இவைகளை நன்றாக கைய வைத்து துளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட வேண்டும்…(இந்த கலவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கலாம்)

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது.
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.
வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.
மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

இப்படி செய்யும் பொழுது ..வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல் படும் …

8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..

9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு “கோ” என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்…

10.முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

11.வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ….

12.இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்..

13.ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.

14.வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது…

Read Previous

பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பூ பூரி..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Read Next

சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,20,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular