
புத்தகப் பையை எடுக்கும் வயதில்
ஆயுதத்தை எடுத்தேன்..
நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடம் சரியாக போக மாட்டேன்.
அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் யார் யார் வரவில்லையோ அவர்களையெல்லாம் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்களின் வீட்டுக்கு வந்து தூக்கிட்டு போய் விடுவார்கள்.. ஆசிரியர்களுக்கு தன்னுடைய மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் படிக்க வேண்டும் என்று… ஆனால் இன்று கதையோ வேறு..
அப்படித்தான் நான் ஒரு நாள் பள்ளிக்கூடம் போகவில்லை என்னை கூப்பிடுவதற்காக என்னை கூப்பிட்டு போவதற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய அண்ணன் மச்சான் அவர்கள் வந்தார்கள். நான் பள்ளிக்கூடம் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்தேன்
அவர்கள் விடுவதாக தெரியவில்லை அப்போது வீட்டில் விறகு வெட்டுவதற்காக ஒரு சின்ன அருவாள் இருந்தது அதை தூக்கிக் கொண்டு அவர்களை விரட்டி விட்டேன்..
அவர்கள் என்னை விடுவதாக தெரியவில்லை என்னை பிடித்து அருவாளை பிடுங்கி விட்டு
என்னை பள்ளிக்கூடத்துக்கு தூக்கிட்டு போய் விட்டார்கள்.. அப்போது அங்கே தலைமையாசிரியரக இருந்த மதிப்பிற்குரிய ஐயா ராமர் ஆசிரியர் எனக்கு புத்திமதி சொல்லி மிட்டாய் எல்லாம் கொடுத்து நல்லா படிக்க வேண்டும் என்று சொன்னார்….
அந்த ஆசிரியர் மட்டும் இல்லை என்றால் என் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்..
ஐந்து வயதில் ஆயுத எடுத்த எண்ணை புத்தகப் பையை தினமும் தூக்க வைத்தது என்னுடைய தலைமை ஆசிரியர் ஐயா மதிப்பிற்குரிய ராமர் வாத்தியார் அவர்கள்தான்..
நான் வெளிநாடு வந்த பிறகு நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்
அந்த புத்தகத்திலிருந்து நல்லா சிந்தனைகளை எடுத்துக் கொண்டேன்
நம்மளும் முகநூலில் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்தது அந்த ஆர்வத்தை உற்சாகப்படுத்தியது சில உறவுகள் தான்.
எல்லோருக்குமே ஒரு சிந்தனை இருக்கும் அந்த சிந்தனையை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருக்கும்.
அந்த சிந்தனையை நீங்கள் வெளியே கொண்டு வந்து விட்டால் நீங்களும் வெற்றியாளர் தான்….