
சின்னசேலம் அருகே வினைதீர்த்தாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே பாலத்தை அகலப்படுத்துவதோடு, உயரமாக அமைக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான சரவணன் தலைமையில் அங்குள்ள பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்