
சின்னத்திரை நடிகரின் கால்களை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார். அதாவது அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர்தான் வெங்கடேசன். மதுரையைச் சேர்ந்த இவர் விளம்பர படங்களை எடுத்தல் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டு வருகின்றார். இதனிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துக்கு ஏற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இதில் வெங்கடேசனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் மனைவி பானுமதி குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் ஓட்டுனராக பணியாற்றும் மோகன் என்பவரிடம் பானுமதி, வெங்கடேசன் காலை உடைக்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
ஒரு லட்சம் ரூபாய் ராஜ்குமார் கேட்டதால் இந்த திட்டத்தை பானுமதி கைவிட்டு உள்ளார். இதனை அடுத்து பாஜகவை சேர்ந்த வைரமுத்து என்ற தனது உறவினரை தொடர்பு கொண்டு கணவரின் நடத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வைரமுத்து கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி வெங்கடேசனை கட்டையால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இதில் வெங்கடேசன் இரண்டு கால்களும் உடைந்தது. இதனை அடுத்து வெங்கடேசன் தரப்பில் அளித்த புகார் அடிப்படை அவரது மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தகுமார், மலைச்சாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.