தற்பொழுது சினிமாத்துறை பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் பல்வேறு கலைஞர்களும் தங்களது நடிப்பின் திறமையினால் வளர்ந்து கொண்டே வருகின்றன. சின்னத்திரையில் தனது மூன்று வயதில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை அஷ்ரிதா. அவர் “அம்மா அப்பா” என்ற சீரியலின் மூலம் முதன்முதலில் சின்ன திரையில் அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து அவர் “கனா காணும் காலங்கள்”, “சொந்த பந்தம்”, “கல்யாணப்பரிசு”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, “தேன்மொழி பி ஏ” மற்றும் அண்மையில் முடிவடைந்த “தமிழும் சரஸ்வதியும்” உட்பட பல்வேறு நெடுந்தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
மேலும் நடிகை அஷ்ரிதா “தெகிடி”, “திருமணம் எனும் நிக்கா”, “ஆறாவது சினம்”, “என்னை அறிந்தால்”, “கொரில்லா”, “வனமகன்” ஆகிய படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது “எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனது. ரொம்ப நாள் ரொம்ப நேரம் யோசித்தால் சில விஷயங்கள் நினைவில் வரும். அப்பொழுது பயங்கரமாக எனக்கு தலைவலியும் ஏற்படும்.
இனி நடக்கவே முடியாது உயிர் வாழவே முடியாது ஒருவேளை பழைய நிலைக்கு திரும்ப 10% தான் வாய்ப்பு இருக்கு அதனால் அவர் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் நான் எனது அம்மா மற்றும் என் மன தைரியத்தால் ஒரு மாதத்திற்குள்ளேயே கேமரா முன் வந்து நின்றேன் மருத்துவர்களே என்னை கண்டு ஆச்சரியமாய் பார்த்தார்கள்”, என அவர் கூறியுள்ளார்.