நாங்குநேரி என்னுமிடத்தில் இருக்கும் மாணவர் தான் சின்னத்துரை. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதல் நடந்தது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் நாம் அறிந்ததே. அதன் பிறகு நடந்த தேர்வில் இவர் நல்ல மதிப்பெண் பெற்றதால் மக்களால் பாராட்டப்பட்டு வந்தார். இப்போது இதே போன்ற தாக்குதல் அவருக்கு நடந்துள்ளது.
இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவர் தனது instagram இன் மூலம் சில பேருடன் பழகி உள்ளார். அவர்கள் சின்ன தறையை தனியாக அழைத்து வந்துள்ளனர். யாரும் இல்லாத வேலையில் சின்ன துறையை தாக்கியும் உள்ளனர்.
இதற்கு முன்பு நடந்த தாக்குதலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற விசாரணையில் அப்படி எந்த தொடர்பும் இல்லை என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சின்னத்துறையை தாக்கியவர்களை சீக்கிரம் கைது செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.




