குறிப்பிட்ட விஷயங்களை மனதில் வைத்திருப்பது மட்டுமல்ல மனதில் இருக்கின்ற திறமையை சரியான நேரத்தில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நினைவாற்றல் திறன் முறையாக செயல்படுகிறது என்று அர்த்தம்..
குழந்தை பருவத்தில் நினைவாற்றல் முழுவதுமாக வளர்ச்சி பெறாது என்றாலும் அதை முறையாக வளர்ப்பதற்கான சூழல் நிச்சியம் இருக்கும். இதுவும் இரண்டு வயது முதல் 8 வயது வரை என்ன சொன்னாலும் குழந்தைகள் அதீத ஞாபக சக்தியுடன் இருப்பதோடு சொல்லக்கூடிய விஷயத்தை சரியாகவும் செய்வார்கள். இத்தகைய திறமையை முறையாக வளர்த்து விடுவது பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனை அதிகளவில் உள்ளதா கவலை வேண்டாம் குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில விஷயங்களை நீங்கள் மாற்ற வேண்டும்..
குழந்தைகள் எப்போதும் நினைவாற்றலோடு வளம் வருவதற்கு ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொடுக்கலாம் இயற்கை காட்சியாக இருந்தாலும் கார்ட்டூன் போன்ற எந்த ஒரு விஷயங்களை வரைய சொல்லலாம் ஆரம்பத்தில் பார்த்து வரைய சொல்லுங்கள் இரண்டு அல்லது மூன்று முறை வரைந்த பின்னதாக அவர்களை எதையும் பார்க்காமல் வருவதற்கு முயற்சி செய்யலாம் இவ்வாறு செய்யும் போது என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் எந்த இடத்தில் வரவேண்டும் என்பது போன்ற அனைத்து விபரங்களையும் நினைவு கூற முடியும்..
பாடப்புத்தகங்களை மட்டும் படிப்பதால் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ந்து விடாது மாறாக கதை புத்தகங்கள் புராண கதை புத்தகம் போன்றவற்றை வாசிக்க சொல்லவும் குழந்தைகள் வாசிப்பதோடு நின்றுவிடாமல் என்ன படித்தீர்கள் என்பதை கதையாக சொல்ல அறிவுறுத்தவும் இந்த நடைமுறையால் நினைவாற்றல் மேம்படும்…
குழந்தைகள் எப்போதுமே புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அதிலும் போட்டி என்று வந்துவிட்டால் திறமையை எப்படியாவது அதிக படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த நிலையில் தமிழ் ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளை கற்றுக் கொடுக்கவும் ஆரம்பத்தில் சிரமப்படுவார்கள் மற்ற குழந்தைகளின் போட்டி போட்டுக் கொண்டு படிக்கும்போது ஆர்வம் அதிகரிக்கும் கற்ற புதிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து பேசுவார்கள் இதன் மூலம் நினைவாற்றல் மேம்படும்..
குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த அடுத்தபடியாக செய்ய வேண்டியது தியானம் மனதை ஒருநிலைப்படுத்துவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கும்..
இன்றைய சூழலில் ஒவ்வொரு வீடுகளிலும் சிறிய அளவிலாவது தோட்டங்கள் இருக்கும் இதை எப்படி பராமரிப்பது எந்த நேரத்தில் விதை நட வேண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் பெற்றோர்கள் உதவி இன்றி தனியாக செய்ய ஆரம்பிக்கும்போது சொல்லிக் கொடுத்த விஷயங்கள் நினைவுக்கு வரும் இதனால் குழந்தைகளின் ஞாபக சக்தி மேம்படும்..!!