
புகைப்பிடித்தல் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் புகைப் பழக்கத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சில நபர்கள். புகைப்பிடிப்பது அவர்களின் உடல்நலத்திற்கு மட்டும் கேடு விளைவிப்பது அவர்களின் சுற்றியுள்ளவர்களின் உடல் நலத்திற்கும் மிகப்பெரிய கேடு விளைவிக்கும். என்பதை உணர்ந்தால் புகை பிடிக்கும் பழக்கம் நாட்டில் சற்று குறைய ஆரம்பிக்கும். இதை உணர்ந்தும் கூட ஒரு சில நபர்கள் இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்று கூறுவார்கள். அவர்களுக்கான நிரந்தர தீர்வு தான் சின்ன வெங்காயம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
புகைப்பிடிப்பவர்கள் தினமும் அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் சாறு நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும். புகைப்பிடிக்கும் பழக்கம் சற்று குறைய ஆரம்பிக்கும். சின்ன வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேருவதை இயல்பாகவே கரைத்து உடல் எங்கும் இரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது இரத்தம் உறையும் பிரச்சனை சரியாகும் இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும் .