
சேலம் நகரில் உள்ள நெடுஞ்சாலை நகர், கிருஷ்ணா தெருவில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரத்தில் இருக்கும் வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அதிரடியாக சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதியானது. இதற்கு மூளையாக செயல்பட்ட தம்பதி திவ்யா – பாலமுரளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மூளைச்சலவை செய்து ஏழை பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியது விசாரணையில் தெரியவந்துள்ளது.