
பிரபல நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, “தரமான படங்களை தர வேண்டும் என்பது ராஜ் கமல் பட நிறுவனத்தின் லட்சியம். இது நாற்பது ஆண்டுகளாக தொடர்கிறது. எங்கள் நோக்கத்துக்கு ஏற்ற வகையில் இந்த படம் அமைந்துள்ளது. சிலம்பரசன், தேசிங்கு பெரியசாமி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.