சிறகடிக்க ஆசை : விஜயாவின் இரண்டு லட்சம் ரகசியத்தை கண்டுபிடித்த ரோகிணி : மீனா கண்டுபிடித்த புது விஷயம்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா எதற்காக சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கினார், என்ற ரகசியம் ரோகினிக்கு தெரிய வந்திருக்கிறது அதே நேரத்தில் மீனா புதிதாக பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்…

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்து விஜயா முத்துவும் மீனாவும் வேணும்னா இங்க இருக்கட்டும் ஆனால் மீனா வீட்டிலிருந்து யாரும் இங்கு வரக்கூடாது என்று சொல்லுகிறார், அதற்கு மீனா ஒரு விசேஷம் என்றால் அம்மா தங்கச்சி வரக்கூடாது என்றால் எப்படி அத்தை என்று கேட்கிறார், அதற்கு விஜயா அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனா அவங்க வரக்கூடாது அப்படி வந்தா வாசலோடு நிற்கட்டும் என்று சொல்கிறார் அதற்கு அண்ணாமலை நமக்கு மீனா குடும்பமும் முக்கியம் என்று சொல்ல விஜயா இவங்க குடும்பம் எல்லாம் முக்கியம் கிடையாது வீட்டுக்கு வரும்போது காது கழுத்தில் என்ன இருக்குன்னு பாத்துட்டு போய் நான் ரோட்டில் போகும்போது அதை அத்துட்டு போயிடுவாங்க இவங்க குடும்பத்தை இனி நான் நம்ப மாட்டேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார். அடுத்ததாக அண்ணாமலையிடம் நீங்க என்னை விவாகரத்து செய்யப் போறீங்களா அம்மா வீட்டுக்கு போக போறேன்னு சொன்னீங்களா என்று கேட்கிறார் உடனே அண்ணாமலை முத்துவை பார்க்க முத்து சிரித்துக் கொண்டு சமாளிக்கிறார் பிறகு எல்லாரும் ஒரு வழியாக சமாதானமாகி விடுகிறார்கள் அப்போது ரோகினி ரூமுக்கு போய் அத்தை எப்படி திரும்பி வந்து இருப்பாங்க என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக இதைப்பற்றி பார்வதி ஆண்டியிடம் விசாரிச்சா தெரியும் என்று பார்வதி வீட்டிற்கு கிளம்பி செல்கிறார் பார்வதி என்னை பார்க்க வா வந்த என்று கேட்க ஆமா ஆண்ட்டி இந்த தெருவில் இருக்கும் ஒரு க்ளையன்ட் பார்க்க வந்தேன். அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்கிறார், பிறகு பார்வதி எனக்கு கைகளால் தலைவலியா இருக்கு என்று சொன்னதும் ரோகிணி நான் உங்களுக்கு மசாஜ் பண்ற என்று அசாச் பண்ணி நைசா விஜயா பற்றி பேச்சை எடுக்கிறார், அப்போது விஜயாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பது போல ரோகிணி பேசியதும் பார்வதி வக்கீல் 2 லட்சம் கொடுத்தால் விஜயா கேஸ் வாபஸ் வாங்கிய விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார், அதை நம்பாதது போல ரோகிணி துருவி துருவி கேட்க அதற்கு பிறகு ரோகினையை கூட்டிக்கொண்டு பணத்தையும் எடுத்து காட்டுகிறார், பிறகு ரோகிணி அத்தை சரியான கேடியா இருக்காங்க என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போய் விடுகிறார் அடுத்ததாக இறுதியில் மீனா திருமண மண்டபத்துக்கு அலங்காரம் செய்யும் விதத்தை சின்ன மாடலாக செய்து வைத்திருக்கிறார். இதை முத்துவிடம் சர்ப்ரைஸாக காட்ட முத்து பாராட்டிக் கொண்டிருக்கிறார் அப்போது ஸ்ருதியும் வருகிறார் அவரும் பாராட்டுகிறார் பிறகு இதனை வெளியில் மார்க்கெட் பண்ண வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார் அதற்கு முத்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது..!!

Read Previous

சூப்பர் சிங்கர் ஜூனியர் தொடங்கியாச்சு : எப்போ இருந்து தெரியுமா இந்த முறை இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கு..!!

Read Next

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் திருப்பம் நீதிமன்றம் முக்கிய ஆணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular