
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு சிறந்த வழிகள் தினமும் மூன்று லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் கற்கள் உருவாகும் போதே அவை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் கற்கள் உருவாகும் என அர்த்தம் கிடையாது.
கால்சியம் குறைவாக சாப்பிட்டால் ஆக்சிடன்ட் சிறுநீரகத்தில் அதிகமாக படிந்து கற்கள் உருவாகும். சிட்ரிக் அமிலம் உள்ள எலுமிச்சை சாறு குடிப்பது கற்களை வராமல் தடுக்க உதவும் .தினமும் அரை லிட்டர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கவும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. மது அருந்தும் பழக்கம் சிறுநீரக கற்களை கரைக்கும் செயலுக்கு எதிர்வினையாக அமையும். உடல் பருமனாக இருந்தால் குறைக்க வேண்டும் .அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு உதவும் 5 கிராமுக்கு மேல் உப்பு உட்கொள்ளக் கூடாது. இந்த விஷயங்களை முறையாக பின்பற்றினால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.