
சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
சிறுநீரகம்..!! சிறுநீரகம் என்பது நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. சிறுநீரகத்தை மட்டும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உயிர்போகும் அபாயம் கூட ஏற்படலாம். இந்நிலையில் சிறுநீரகத்தை செயல் இழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உடலில் உள்ள அனைத்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை நமது இரத்தத்திலிருந்து சுத்தப்படுத்தி அவற்றை வெளியேற்ற சிறுநீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள் இதுதான்.
அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடும்போது சிறுநீரகத்திற்கு கூடுதல் அழுத்தம் உண்டாகும். இதனால் சிறுநீரகம் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் உடலில் உள்ள நச்சுக்கள் அதிகமாகும் இது போன்ற நச்சுக்களை ரத்தத்திலிருந்து வடிகட்டும்போது சிறுநீரகம் மெது மெதுவாக செயல் இழக்க செய்கிறது.
அது மட்டும் இன்றி அதிக அளவு மாத்திரை சாப்பிடுவதாலும் உங்கள் சிறுநீரகம் விரைவாக பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. எந்தவிதமான மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பொழுதும் மருத்தவரை ஆலோசிப்பது மிகவும் சிறந்தது.
அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுவதாலும் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள சோடியம் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். இதன் காரணமாகவும் சிறுநீரகம் செயல் இழக்கும்.
எனவே இதை எல்லாம் தெரிந்து கொண்டு செயல்படுங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.