நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அப்படி ஒன்றுதான் வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் வாழைத்தண்டு சாப்பிடலாம். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை உயர்த்தவும் இந்த வாழைத்தண்டு உதவுகிறது. இதை வைத்து சட்னி எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 10 தேக்கரண்டி
நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிய துண்டு
புளி – தேவைக்கேற்ப
உளுந்து – 3 தேக்கரண்டி
தனியா – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – இரண்டு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கருவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து உளுந்து தனியா சீரகம் காய்ந்த மிளகாய் வெள்ளை எள்ளு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்று சேர்த்து வறுத்து கொள்ளவும். அதை ஆற வைக்க வேண்டும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்க வேண்டும்.
அந்த வாழைத்தண்டும் நன்கு ஆரிய பின்பு தேங்காய் துருவல் உப்பு, புளி, இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து முன்பு வறுத்து வைத்திருக்கும் பொருள்களையும் சேர்த்து ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடைசியாக ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வாழைத்தண்டு சட்னி தயார்.




