சிறுநீரக கற்கள் கரைவதற்கு எளிய முறைகள் உண்டு அவற்றில் வாழைத்தண்டு வாழைத்தண்டு சாறு முதலிடத்திலும் உள்ளது, மேலும் அதிகம் நீர் அருந்துவதால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும் அதேபோல் வாழைப்பூ சிறுநீரக கற்களுக்கு சிறந்த மருந்தாகும், இந்த வரிசையில்..
இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், நாட்டு சக்கரை ஒரு ஸ்பூன் போட்டு மாலையில் கண்களை மூடி வைத்து மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து விடும், அதேபோல் வெறும் வயிற்றில் தொடந்து இருபது நாட்கள் வாழைத்தண்டு சாறை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களையும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும், மேலும் நீர் ஆகாரம் கொண்ட பழங்களை பானங்களாக அல்லது பழங்களாக உட்கொள்ளும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்கிவிடும் மேலும் இளநீர் சிறுநீரக கற்கள் நீங்குவதற்கு சிறந்த மருந்தாக உள்ளது..!!




