சிறுநீரக கல் பிரச்சனைக்கு இந்த வாழைத்தண்டு ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் சிறுநீரகக் கற்கள் கரையவும் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு இருந்தால் கூட அதனை குணப்படுத்தும். மேலும், வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சனைகள் விலகுவதோடு சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைக்க இது மிகவும் உதவுகிறது. இந்நிலையில் வாழைத்தண்டு ஜூஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
வாழைத்தண்டு ஜூஸ்:
வாழைத்தண்டை முதலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதில் பூண்டு, சீரகம், மிளகு, மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீரகப் பிரச்சனைகள் நீங்கும் . உடல் கனம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.




