தேவையான பொருள்: கருஞ்சிரகம் 10 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கருஞ்சிரகத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் கருஞ்சிரகம் பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்கவைக்கவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வர சிறுநீரக பிரச்சனை சரியாகும். குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் கருஞ்சிரகம் பயன்படுத்தி மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும்.