இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!! உஷாரா இருங்க மக்களே..!!

சிறுநீரக தொற்று ஏற்பட்டால் ஏற்படும் அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையை சிறுநீரகம் செய்கின்றது.பின்பு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்ற உதவுகின்றது. ஆனால் சமீப காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகின்றது.

இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை பிரித்தெடுப்பதற்கு டயாலிஸ் முறையை பின்பற்றி வருகின்றனர். இதனிடையே சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிறுநீரக தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இப்பிரச்சனையின் அறிகுறிகள் சிறியதாக தோன்றும். ஆனால் அவற்றினை அலட்சியமாக புறக்கணித்துவிடக்கூடாது.

சிறுநீர் பாதை தொற்று (UTI) அறிகுறிகள் பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும், சிறுநீர் கழிக்கும் போது அவசரம், சிறுநீரில் இரத்தம், அடிவயிற்றில் வலி ஆகியவை அடங்கும்.சிறுநீர் தொற்று என்பது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், காலப்போக்கில் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவற்றின் அறிகுறிகள் கடுமையாகிவிடுமாம்.

அதாவது சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் உணர்வு, இடுப்பு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்படுவது அறிகுறியாகும்.

சிறுநீர்ப்பை நிரம்பாவிட்டாலும் கூட சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீரில் கடுமையான துர்நாற்றம் வீசுவது.

சிறுநீர் கழிக்க அவசரமாக செல்ல வேண்டும் என்ற நிலையில், சென்றால் சிறுநீர் சொட்டு சொட்டாக மட்டுமே வெளிவருவது தீவிர அறிகுறியாகும்.

Read Previous

அதிகாலையில் பிளாக் காபி அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா..??

Read Next

நல்லெண்ணை விளக்கு ஏற்றுவீங்களா..?? இந்த 2 பொருள் சேர்த்தா கொசுக்கள் இருக்காது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular