
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு சிறுமிக்கு வேடசந்தூர் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் 43 என்பவர் பாலியல் தொல்லை அளித்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவு அடைந்தது. இதனை அடுத்து வழக்கில் தீர்ப்பு அளித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி வெங்கடேசனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தர விட்டார்.