
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் உளுந்தூர்பேட்டை வந்த சிறுமி அந்த இளைஞருடன் தங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வந்து சிறுமியை மீட்டுச் சென்று இருக்கின்றனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த இளைஞர் தான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.