இன்றைய காலகட்டங்களில் இயற்கையான பாரம்பரிய உணவுகளை காட்டிலும் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் நூடுல்ஸ் என பல வித விதமான உணவுகளை சாப்பிட்டு தங்களின் உயிர்களை தாங்களே பறிகொடுத்து விடுகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் திருச்சி அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவி நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கச் சென்ற மாணவி இறந்துள்ளார்..
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்டெஃபி ஜாக்லின், இவர் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து அதனை நேற்று இரவு சமைத்து சாப்பிட்டுள்ளார் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்து வராததை கண்டு பெற்றோர்கள் தனது மகளை எழுப்பி உள்ளனர் இந்த நிலையில் தூக்கத்திலேயே இருந்து கிடந்த மாணவி உடனே திருச்சி காவல்துறையினர் மாணவியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு தான் மாணவியின் இறப்பிற்கான தகவல்கள் கிடைக்கும் என்று காவல்துறையினர் கூறிய நிலையிலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டதனால்தான் எங்களின் பிள்ளை உயிர் பறிபோனது என்று கண்ணீரோடு தெரிவித்தனர்..!!