
உ.பி: படாயூன் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி ஓம் என்பவர் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். சில நபர்களால் கடத்தப்பட்ட தன்னை சென்னைவில் இருந்து ஹரி மீட்டதாகவும், ரயில் பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர், அறைக்குள் அழைத்து சென்று தன்னை அவர் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட உயரதிகாரியான DIG இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.