சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த காமுகன்..!! மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் தனது பெற்றோர்களுடன் சிறுமி ஒருவர் வாசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று சிறுமியின் பெற்றோர் உறவினரின் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.

வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சார்ந்த இளைஞர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனால் மணமுடைந்த சிறுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் அருந்தி உள்ளார். சிறுமியை கண்ட அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது உண்மை தெரிய வரவே உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்ததை கேட்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞரை தீவிரமாய் தேடி வருகின்றனர், மேலும் மருத்துவமனையில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Previous

குழந்தை பிறப்பதை தடுக்கும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள்.!! நியூயார்க் மருத்துவர் அதிர்ச்சி தகவல்.!!

Read Next

2 கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!! பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular