சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு நேரில் சென்று சோதனை நடத்தியதில் 17 வயதுடைய சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் அவருடன் உல்லாசமாக அனுபவிக்க வந்த 70 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெண் தரகர் நதியா (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது நதியாவுக்கு 12ஆம் வகுப்பு பயின்று வரும் 18 வயதுடைய மகள் உள்ளார். இவரின் மூலமாக நதியாவின் மகள் படிக்கும் வகுப்பில் உள்ள சக மாணவிகளின் ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து பேசி அவர்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதில் அழகான பெண்களை மட்டும் அவர் தேர்வு செய்து அனுப்புவாராம். சிறுமிகளை உள்ளூர் புரோக்கர்கள் உதவியுடன் விடுதி உட்பட்ட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த தல ஒரு சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30,000 வரை விலையும் பேசப்பட்டு பாலியல் தொழில் நடக்க உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.