சிறுமி காரில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!! குற்றவாளியை சுட்டுப்பிடித்த உ.பி காவல்துறை..!! அதிரடி நடவடிக்கை.!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தை சார்ந்த சிறுமி சம்பவ தினத்தன்று திருமண ஊர்வலத்தை பார்க்க சென்றுள்ளார் .அப்பொழுது திருமண ஊர்வலத்தில் காரில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றனர்.

ஓடும் காரிலேயே சிறுமியை  இருவரால் கூட்டு பாலியல் பலாத்கரம் செய்யப்பட்டுள்ளார். பின் சிறுமையை காரில் இருந்து இறங்கிவிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து பெற்றோரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். அவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பகுதியை சார்ந்த ஜாகிர் (வயது 58) நாசிம் (வயது 30) ஆகியோரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை அதிகாரிகள் தீவிரமாய் தேடி வந்தனர், இந்நிலையில் இவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய முற்பட்டனர். அப்போது அதிகாரிகளை தாக்கி குற்றவாளிகள் தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

பாதுகாப்பு கருதி நடத்தப்பட்ட என்கவுண்டரில் குற்றவாளி நாசிமின் கால்களில் குண்டு பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கயவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டு உள்ளது.

Read Previous

நெஞ்செரிச்சலால் சிரமப்படுகிறீர்களா..? அப்பொழுது உங்கள் இந்த பதிவு உங்களுக்காக தான்..!!

Read Next

உல்லாசத்திற்கு மறுத்த லிவிங் டுகெதர் காதலி..!! கத்தரிக்கோலால் கழுத்திலேயே குத்தி கொடூர கொலை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular