சிறுமி பலாத்காரம் செய்து கொலை : வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு..!!

சிறுமியை கொன்ற வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட் பரபரப்பு திர்ப்பளித்தது..

திருவனந்தபுரம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி கேரளா ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது, கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது, கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமி உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார், இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது புகார் அளித்த சிறுமி தாயாரின் இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் 26 என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரியவந்தது, இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார், இதனிடையே அவர் மீது கொலை, பாலியல், பலாத்காரம், கோக்சோ உள்ளிட்ட 16 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கு பத்தினம்திட்டா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இரண்டாவது கணவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார், மேலும் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நேற்று அவருக்கு தூக்கு தண்டனை விதித்து போட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது, அபராதம் செலுத்த தவறினால் அது சட்டத்தின்படி வசூலிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது..!!

Read Previous

மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது பெற்றோர்கள் புகார்..!!

Read Next

ஆன்மீக தலை நகரங்களை இணைக்கும் ஆந்திரா-தமிழக பக்தர்கள் பயன்பெறும் ஸ்ரீவில்லிர் புத்தூர் ஆண்டாள் எக்ஸ்பிரஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular