
சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சித்தியே சிறுமியை கொலை செய்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தந்தையின் 2வது மனைவியான சித்தியுடன் வீட்டில் இருந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் கழுத்தில் காயம் இருந்ததால் சித்தி தான் கொலை செய்ததாக கூறி சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.