சிறுவன் பட்டாசு வெடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிங்கம்புணரி கக்கன் நகரைச் சோ்ந்தவா் மீனாட்சி அம்மாள் (80). இவரது பேரன் வீட்டின் முன்பாக, பெரிய வெடிகள் இரண்டை ஒன்றாக இணைத்து, அதன்மேல் டிபன் பாக்ஸை வைத்து பற்ற வைத்தாா். அப்போது வெடி வெடித்த போது சிதறிய டிபன் பாக்ஸ் மீனாட்சி அம்மாள் மீது தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சிங்கம்புணரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Read Previous

‘வாரணம் ஆயிரம்’ இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு..!!

Read Next

டெல்லி முதல்வரால் எனது உயிருக்கு ஆபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular