
பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து தற்பொழுது நடிகராக மாறிய சிவகார்த்திகேயன் பின் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது மிகவும் உச்சகட்ட நடிகராக உள்ளார்.
எந்த ஒரு பேக்ரவுண்ட் சப்போர்ட்டும் இல்லாமல் வளர்ந்து வந்தவர்தான் சிவகார்த்திகேயன். கோலிவுட் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கின்ற சிவகார்த்திகேயன் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வருடத்தில் வெளியாகிய “மெரினா” என்கின்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானவர்தான் சிவக்கார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “எதிர்நீச்சல்”, “மான்கராத்தே”, “ரஜினி முருகன்”, “டாக்டர்”, “ரெமோ” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தன் நடிப்பினை தாண்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்றினையும் துவங்கியுள்ளார். அதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பின் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.